ஆதலால் தானாமகனே

உன்னைப் பெற்றவன்
என்பதால் நான்
பெற்றதென்ன மகனே ...?
தினமும் கனவுகளைத் தவிர..?

கண்ணின் கருமணிஎனக்
காத்து வந்தேன் .
ஆதலால் தானா ..
உள்ளிருந்தே உறுத்துகிறாய்

உன் விடியல்களே நான்
ஆதலால் தானே
விடியும் போது மறையும்
வெள்ளியாக நான்..!

உன் வெற்றிக்குப் பின்னால் நான்
ஆதலால் தானே
தோல்விகளையே
எனக்குப் பரிசளிக்கிறாய்..?

தானம் பெற்றதில்லை
ஆதலால் தானம் தர
உவந்து விட்டாய் .

முகவரி தந்தவன் என்பதாலா
தேடுகிறாய் காப்பக முகவரி..?

கலங்கரை விளக்கமும்
நான் ஆனதால் உன்னைக்
கரையேற்றிய பிறகும்

கரையோரத்திலேயே ...,
என்றும் கண்ணீருடன்
.........நான்...!

எழுதியவர் : மின்கவி (21-Jan-14, 9:54 pm)
பார்வை : 116

மேலே