பாதரச பதுமை

ஏழு கடல் கடந்து,ஈராறு மலைகள் பின்

சிறுத்த கிளி காக்கும் விளக்காய்,,





சிலந்தி வலை சிக்கல்கள்..

பிடரிப் பிடிக்கும் நச்சு நாகங்கள்...

சர்க்கரைப் பசப்புப் பேச்சுகள்....

சூது கவ்வும் சூழ்ச்சி முடிச்சுகள் ..

கண்பொத்திக் கழுதருப்புகள்....



அவள் கடந்தாயிற்று!!!!



காழ்ப்பு கங்கவிக்கும் கரிமக்காற்றவள்

வெறுப்பு வெப்பத்தில் கருகுவதில்லை ...



களிமண் கன்னி,, இறுகி இரும்பானாள் ...



செதில் செதிலாய் சிதறடித்தும்

ஷணமெனப் பிணையும் பாதரச பதுமை ....



வஞ்சம் வளர்க்க ..அவளிடம் வினாடிகள் இல்லை!!

நேச நூலில் பாச நெஞ்சங்களின்

ஊசலில் அவளுலகு .



அறிவிலி அன்பில் ,,நிர்மல நிலவில்

அண்டம் தாண்டி,,கோள் கடந்துழல,,



கபடு கரைக்கும் பிள்ளைப் ப்ரியங்களில் .. ..

அமிலங்கள் அவளை அழிப்பதில்லை .!!!.





தூற்றுவோர் துலங்கட்டும்!!!

வெறுப்போரும் விளங்கட்டும் !!!..



அனுமானங்களுள் அடைத்து கொள்ளுங்கள் !!

துடுப்பில்லாபப் பரிசில்கள் பாதைகள் பார்ப்பதில்லை!!!



காற்றுடன் கைசேர்ந்து கடைசியில் கரைசேரும்...



ஒருகால் ..மூழ்கி மறைந்தால் ...



சாம்பல் காட்டில் கண்ணீர் கசியுங்கள் ...



அரளிகளாவது..அங்கே அரும்பி தொலையட்டும்!!!!

எழுதியவர் : இஇந்து (21-Jan-14, 10:19 pm)
பார்வை : 65

மேலே