saikrupaindu - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : saikrupaindu |
இடம் | : United States |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 101 |
புள்ளி | : 58 |
வாசிப்பின் ருசி அறிந்தவள்...
வரங்கள் வேண்டாம் !!
நீ
விழித்திரையில் போதும் ..
அருகாமையில் வேண்டாம்..
தூரப்பார்வை தூறல்கள் போதும்.
அலைபேசியில் நீ வேண்டாம்
அலைவரிசைக்குள் போதும்
முத்தங்கள் வேண்டாம் !
மரணத்தில் மடி போதும் ..
என்னோடு நீ வேண்டாம் !
எங்கேனும் நீ .. சிரிப்போடு போதும் ..
வாழ்த்து அட்டைகள் வேண்டாம்!
வளமான நின் வாழ்வு போதும் .
காற்றில் குறுஞ்செய்தி வேண்டாம்!!
உன் கிறுக்கு குறும்புகள்
நினைவின் கிடப்பில் போதும் ..
வேராக வேண்டாம் !
வேறாகாத நீ போதும் .
எனக்காக நீ வேண்டாம் !
என்னில் நீ என்றும்....
அதுவே போதும் !!!
வேறென்ன வேறென்ன வேண்டும் !!
ஏழு கடல் கடந்து,ஈராறு மலைகள் பின்
சிறுத்த கிளி காக்கும் விளக்காய்,,
சிலந்தி வலை சிக்கல்கள்..
பிடரிப் பிடிக்கும் நச்சு நாகங்கள்...
சர்க்கரைப் பசப்புப் பேச்சுகள்....
சூது கவ்வும் சூழ்ச்சி முடிச்சுகள் ..
கண்பொத்திக் கழுதருப்புகள்....
அவள் கடந்தாயிற்று!!!!
காழ்ப்பு கங்கவிக்கும் கரிமக்காற்றவள்
வெறுப்பு வெப்பத்தில் கருகுவதில்லை ...
களிமண் கன்னி,, இறுகி இரும்பானாள் ...
செதில் செதிலாய் சிதறடித்தும்
ஷணமெனப் பிணையும் பாதரச பதுமை ....
வஞ்சம் வளர்க்க ..அவளிடம் வினாடிகள் இல்லை!!
நேச நூலில் பாச நெஞ்சங்களின்
ஊசலில் அவளுலகு
பத்துக்கு பத்தின் பாதி அறையில் ..
பற்பல உடையில் பார்பிகளும், இரண்டுமாடி குடியிருப்புகள் ,,சிகை திருத்தும் நான்சி ,,
மொன்ஸ்டர் ஹை மாடல் லியான் ,அமெரிக்க அழகி எமிலியும் ,,
கால்பிடித்தால் வாழ் குழைத்துக் குரைக்கும் பிளாப்பி,
வரிசையாய் கட்டிலில்
பஞ்சடைத்த கரடிகள், பென்குயின்கள் சூழ்
காற்றில் மிதக்கும் இதழ் ....அவள் உலகம்,,
கடல் கன்னியின் கோட்டையில் ,
டிஸ்னி இளவரசியின் உருவம் சுமந்த போர்வைக்குள் ..
அவளுக்கே அவளான அனைத்தும்...
உடன்பிறப்பின் சிலந்திமனிதனும்,,பென்டென்னும்
அவ்வப்போது அங்கு வருவதுண்டு.!!.
பரவிய லெகோஸ் ,,சிதறிய கலர் பென்சில்லுமாய்
இருளில் மினுக்க
ஒன்றின்பின் ஒன்றாக உலர்த்தப்பட்ட உண்மைகளை உறிஞ்சி.... நைந்தது நூற்கயிறு ......
ஈரத்தில் காளானும் பாரமூட்ட ,,,நீர்க்ககாமல் வளைந்தது சிறுகயிறு...
காற்றின் அசைவில் ,
அகாலமாய் அறுந்து பிளவ...
வீழ்ச்சியின் விசாரிப்பில் ...கண்பொத்தி,,
காரணம் களைய ...
ஆள்காட்டிகளின் அடையாளங்களில்
கறைபட்டது ..
களங்கமில்லாக் காற்று !!
மறைத்து மடிக்கப்பட்டது .. ...
ஈரிப்பில் கனத்த உலராத உண்மைகள் ....
சிலுவையில்,,,, காற்றின் சன்னக் குரல் செவிகளில் அறைவதில்லை....
அறுந்தக் கயிறின் அலைவரிசைக்கு மட்டுமே அது அகப்படுமாக.....
மோக முள்ளின் தீண்டலில் அவிழ்ந்த
அதரங்களை ....,,
அமிழ்ந்து அருந்த...
வாயின் வாசலடைத்தன நாண நந்திகள் .....
தவறி விழுந்த ,,
முடிவுராத முத்தங்கள் ..,
முகாரியில் முனங்கி முடித்தன
அருகாமையின் அடுத்தடுத்த அத்யாயங்களையும்.....
ஆணாதிக்கத்தால்
அடி உதைபடும்
பெண்களின் அவலநிலை
ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க....!!!
0)))
பெண்ணாதிக்கத்தால்
அடி உதைபடும்
ஆண்களின் அவலநிலை
மறுபுறம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது...!!!
0)))
பெண்களின் அவலம்
அழுகையால் வெளியே
கசிவதுண்டு..!!!
0)))
ஆண்களின் அவலம்
சுய கெளரவத்தால் உள்ளுக்குள்
குமுறிக்கொண்டு...!!!
0)))
கொலைகாரனும்
குலை நடுங்கும்
கம்பீரத் தோற்ற காவலதிகாரியும்
கட்டிய மனைவியின்
சுட்டு விரல் அசைவிற்கு
பெட்டிப் பாம்புகளாய்....!!!
0)))
எடுப்பாக உடையணிந்து
மிடுக்காக நடைபோட்டு
எதேச்சதிகாரம் புரியும்
உயர் அதிகாரிகளும்
உற்ற துணையாளின்
உரத்த க
உழுது விழுதானபின்னும் விடுவதில்லை எம்மை
இறுக்கமாக நெறுக்கி , கூட்டமாக கடத்தி ,,
மந்தையாக மடிகிறோம்
காசு சந்தையில் ...
.
கறிமாடுகளாய்......
நிசப்பதங்கள் நிரவிய நீண்ட இரவினை ..
கிழித்து எழுப்புகிறது ..
வன்புணர்ச்சியில் வலித்தழுத ஓர் பெண் நாயின் ஓலம் ..
ஓலத்தை உள்வாங்கி ,,அதன் வலியருக்க வழியின்றி
வேதனை போர்த்தி உறங்கி விழிக்கையில் ....
சிரிக்கும் சிறுமியின் சிதைந்த சடலத்தின் ..நிழல்படம்
சுமக்கும் நாளிதழ் ,,,
கோரபற்கள் காட்டி கொக்கரிக்க..
ஐந்து அறிவு நாயினை மிஞ்சும் ...மானங்கெட்ட ...
ஆறறிவு "மானுடத்தின் மாமிச காமம்"