அபிராம் அகிலம் அவள் உலகம்

பத்துக்கு பத்தின் பாதி அறையில் ..

பற்பல உடையில் பார்பிகளும், இரண்டுமாடி குடியிருப்புகள் ,,சிகை திருத்தும் நான்சி ,,

மொன்ஸ்டர் ஹை மாடல் லியான் ,அமெரிக்க அழகி எமிலியும் ,,

கால்பிடித்தால் வாழ் குழைத்துக் குரைக்கும் பிளாப்பி,

வரிசையாய் கட்டிலில்

பஞ்சடைத்த கரடிகள், பென்குயின்கள் சூழ்

காற்றில் மிதக்கும் இதழ் ....அவள் உலகம்,,

கடல் கன்னியின் கோட்டையில் ,

டிஸ்னி இளவரசியின் உருவம் சுமந்த போர்வைக்குள் ..

அவளுக்கே அவளான அனைத்தும்...

உடன்பிறப்பின் சிலந்திமனிதனும்,,பென்டென்னும்

அவ்வப்போது அங்கு வருவதுண்டு.!!.

பரவிய லெகோஸ் ,,சிதறிய கலர் பென்சில்லுமாய்

இருளில் மினுக்கும் கிளிர் ஒளிர்வு விண்மீன்கள்

வருங்கால கனவின் கிறுக்கலாய் கால்நடை மருத்துவமனையும்,

ஸ்மைலீகளும் கண்சிமிட்டி

சுவரில் சிரிக்க ...

மேசையில் சிந்திய தண்ணீரில் இதயமும் ...

காதினோர பிசிர்முடியில் மீசை சுமக்கும் அவளின் அகண்ட ஆகாயத்தை ...

அண்ணனின் முரட்டு கோட்டைகள் அணுவும் தொடுவதில்லை!!!

இணையத்தில்

அவனின் ஆவேச கார் பந்தையங்களும்

அவளின் எழில் புனை விளையாட்டில் பின்னடையும் ..

உலையாய் பொங்கும் எண்ணத்தில் ..

சிக்குபிடித்த பார்பியின் கூந்தலும்..

காணாமல் போன டைசியின் செருப்புமே

அவளின் அதிகபட்சக் கவலைகள்....

அடுக்கிச் சொல்ல இன்னும் ஆயிரம் இருக்க

கலர் கனவுகளோடு கவின் கவிதையாய்

நம்மை கரைப்பது ..

பெண்குழந்தைகள் மட்டும் அல்ல ..

அவர்களின்

அபிராம அகிலமும் தான் !!!

எழுதியவர் : இந்து (17-Jan-14, 9:51 pm)
பார்வை : 69

மேலே