வேறென்ன வேண்டும்

வரங்கள் வேண்டாம் !!
நீ
விழித்திரையில் போதும் ..
அருகாமையில் வேண்டாம்..
தூரப்பார்வை தூறல்கள் போதும்.
அலைபேசியில் நீ வேண்டாம்
அலைவரிசைக்குள் போதும்
முத்தங்கள் வேண்டாம் !
மரணத்தில் மடி போதும் ..
என்னோடு நீ வேண்டாம் !
எங்கேனும் நீ .. சிரிப்போடு போதும் ..
வாழ்த்து அட்டைகள் வேண்டாம்!
வளமான நின் வாழ்வு போதும் .
காற்றில் குறுஞ்செய்தி வேண்டாம்!!
உன் கிறுக்கு குறும்புகள்
நினைவின் கிடப்பில் போதும் ..
வேராக வேண்டாம் !
வேறாகாத நீ போதும் .
எனக்காக நீ வேண்டாம் !
என்னில் நீ என்றும்....
அதுவே போதும் !!!
வேறென்ன வேறென்ன வேண்டும் !!

எழுதியவர் : இந்து (12-Feb-14, 12:28 am)
Tanglish : veerenna vENtum
பார்வை : 229

மேலே