காதல் கடிதம்

நினைத்தாலே இனிக்கிறது
நெஞ்சில் அந்த நினைவுகளை

உன் இதயத்தில் என் உயிர் இடறியது போல
பேனாவிலிருந்து மை கடிதத்தைத் தொட்டது

அவளுக்காக அறிமுகம் செய்தது கொண்டேன்
அஞ்சல் பெட்டியிடத்து கடிதத்திற்கு காவலிருக்க ,

தாய்மொழியில் உள்ள செல்ல வார்த்தைகளை
சலித்தெடுக்க மீண்டுமொரு குழந்தையாய் கற்றேன்

உள்ளங்களுக்கிடையே அமைந்த பாலமாய்
நாள்தோறும் சுகமான சுவாரசியங்களை
சுமந்து சென்றது சுமையைத் தாண்டி

பிரித்துப் படிக்கும் போது
தாய்மடி தவழும் மழலையாய்
இனம்புரியாத உவகை என் உள்ளத்தில்

அன்பினால் போட்டுகொண்டோம்
அவிழ்க்க முடியாத முடிச்சுக்களை
காகிதத்தின் வாயிலாக

அதிசயங்கள் ஒருசேர அடங்கிபோயின
என்னவள் உன்னை எடுத்தெழுத

எத்துனை ஆச்சர்யங்கள் என்னுள்ளே
கடலை மடித்து நிலவை விரித்து
நானா முடக்கி வைத்தேன் காகிதத்தில்

நாளைக்கு எழுத வார்த்தைகளிருந்தும்
நேரத்திற்கு இன்றைக்கு முடிக்க மனமில்லை

உணர்த்தியது எனக்கு என் இதயத்திற்கும்
வாயுண்டு என்பதனை

எடுத்தேன் நேற்றைய கடிதத்தை
பார்க்கும் போது தெரிந்தது
உன் காதலை கரையானும்
சற்று அனுபவித்துள்ளதென்று

வாசிப்பை சுவாசித்து
நீடிக்கிறேன் உன் நினைவுகளை
உயிராக...

“நீலம் தீட்டிய காகிதம்
நெஞ்சின் உள்ளே பத்திரமாய் ”

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (11-Feb-14, 11:49 pm)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 83

மேலே