♥கவியும் நானும்♥

காலைக் குயில் கானல் - நீரை
தேடும்...அனுபவம்.
புல் நுனியில் படிந்த பனி - பனிச்சரக்கு விளையாடும்...மகிழ்ச்சி.
மேகம் சுழ்ந்த வானம் - தரை இறங்க ஆசைப்படும்...நெகிழ்ச்சி.
நீர் இல்லாத குளத்தில் - ஒற்றை கொக்குக்கு விருந்து...கனவுத்தென்றல்

ஒவியமாய் கவி...நான் அதன் வண்ணம்...!
இசையாய் கவி...நான் அதன் கீற்று...!
அருவியாய் கவி...நான் அதன் ஒடுதளம்...!
உயிராய் கவி...நான் அதனுள் ஒரு உடல்...!

கவிதையும் நானும் நேசிக்கிறோம் - அதன்,
அறிகுறி தான் -கவி ♥.

குறிப்பு:
தலைப்பை கண்டு - கவிதாவை
தேடினால் நான் பொறுப்பல்ல..:)

எழுதியவர் : தங்கம் (11-Feb-14, 11:49 pm)
சேர்த்தது : தங்கமாரியப்பன்
பார்வை : 73

மேலே