பட்டாம்பூச்சி
பூட்டிய அறையெங்கும்
பறந்து திரிந்த பட்டாம்பூச்சி
ஜன்னல் கண்ணாடியில் வந்தமர்ந்தது
ஒளிந்திருந்த பல்லி
மெல்ல இறங்கிவந்து
படக்கெனக் கவ்வியது
அடுத்தடுத்து உதிர்க்கப்பட்டன
பட்டம்பூச்சியின்
கால்களும் உயிரும்
இறகை ஒதுக்கி
சடலத்தை உட்கொண்டு
நகர்ந்துவிட்டது பல்லி
மிரட்சியுடன்
அமர்ந்திருக்கிறேன்
உலக அறையில்!