ஷண்டே ஸ்பெஷல்

ஞாயிறு தோறும்
குடும்பத்தோடு படம் பார்ப்போம்

முதலிரவு காட்சி வரும்போதெல்லாம்
எழுந்து போய்விடுவாள் அம்மா.

ஜன்னல் வழி வானம் பார்த்து
மழைவரக் கூடும் என போய்யுரைப்பார் அப்பா.

எஸ்.எம்.எஸ் அனுப்புவதாய்
கவனத்தைத் திருப்புவாள் அக்கா.

கட்டிப்பிடித்து உருளுவதை
இமைக்காமல் பார்ப்பர் தம்பியும் தங்கையும்

ஞாயிறு தோறும்
குடும்பத்தோடு படம் பார்ப்போம்

எழுதியவர் : ஞா. குருசாமி (18-Jan-14, 4:55 pm)
பார்வை : 70

மேலே