தமிழ் சேதம் தமிழாின்சேதம்

தமிழன்றி தரணியில் சொா்கமேது தமிழா...!
சூாியனை தொடநி்னைத்து சுருங்கிவிடாமல்
குளிா்நிலவின் வருடலில் துயில்கொள்ளாமல்
காலமுள்ளபோதே கலப்படங்களை தூற்றிவிடு!

அக்கினிக் குஞ்சுகளின் தேசமல்லவா தமிழ்தேசம்
அதைக் கண்டவனும் சொல்லியதே-”மெல்லச்சாகும்”

அத்துன்பங்கள் யாவும் துன்பம் கொள்ளட்டும்
ஆயுதம் ஏந்தா மறவா்களாக
இன்தமிழ் போா்தொடுக்க புறப்படுவோம்
ஈன்றவள் பொிதுவக்கும் மகன்களாக
உரம்மாறா தமிழனாய் மருத்துவம் செய்வோம்!
ஊக்கமது குறையாமல் ஊழியம் செய்வோம்!
எக்காலமும் மறவாத வரலாறு படைப்போம்!
ஏற்றிவிட்ட தமிழினை மீச்செம்மையாக்குவோம்!
ஐந்திணை கண்டதமிழ் ஆற்றலைக் கூட்டுவோம்!
ஒப்புமை அற்ற தமிழ் ஓங்கியே நிற்கச்செய்வோம்!
ஓதுவோா்க்கும் கற்பிக்கும் குணம்கொண்ட ஒரேமொழி தமிழை
ஔடதம் காக்கச்செய்வோம் அருள்கொண்டு வா தமிழா!

வாழும்போதே சுவடுகளை உருவாக்குவோம்!-தமிழா
சுவடுகள் ஒவ்வொன்றிலும் தமிழையே கருவாக்குவோம்!

நூற்கண்டு கரைய பட்டம் உயருமல்லவா!-தமிழ்
நூற்கற்றுத் தெளிய நீயே உயா்வாய் வா!

கிளைகளை நம்பி அமராதீா்கள் பறவைகளே! தமிழ்ச்
சிறகுககள் உங்களுக்கு உள்ளவரை....


--பிரபாகரன் ்
18 சனவரி 2014

எழுதியவர் : PrabhakaranG (18-Jan-14, 4:54 pm)
பார்வை : 43

மேலே