ஊருக்கு போகின்றோம்
ஊருக்குப் போகின்றோம் -புது
உறவுகளைத் தேடப் போகிறோம் !
மனம் வாடியப் பயிராய்ப் போன
உடன் பிறப்புகளை பார்க்கப் போகின்றோம் !
மாமன் மச்சானைப் பார்க்கப் போகின்றோம்
மனங் குளிரப் பேசப் போகின்றோம் !
துண்டான உறவுகளை திருமண இணைப்பில்
சேர்க்கப் போகின்றோம் - வாழ்க்கைப் பட்ட தங்கைக்கு சீர் கொண்டு போகின்றோம் !
பொங்கலில் பொங்கிய பொங்கலைப் போல
மனமென்னும் புதுப் பானையில் - அன்பென்னும்
அரிசி இட்டு - பன்பென்னும் செங் கரும்பு சாரிட்டு
விளைந்த மக்களாம் மஞ்சளை உடனிட்டு
பாசமென்னும் உப்பை அதில் போட்டு
குடும்பப் பொங்கலை பொங்கி மனம் மணக்க....!
நா இனிக்க .....! சுற்றும் சூழ மாட்டு வண்டி கட்டி
மனங் குளிரப் போகின்றோம் இந்த காணும்
பொங்கல் திரு நாளிலே .........!