என் மழலை

பனி படர்ந்த அப்பிள் கண்ணம்
அதை நினைத்துருகுது என் எண்ணம்
உதிரம் வரத் துடிக்கும் உன்னிதழோரம்
அதை வருடத் துடிக்கும் என் மனதோரம்

கருவண்டு போலிருக்குது உன் விழிகள்
அதை சிமிட்டாமல் பார்க்குது என் விழிகள்
குறைவாயினும் அழகாயிருக்குது கருமுடிகள்
அதைத் தடவிப் பார்க்கத் துடிக்குது என் கரங்கள்

உன் சிரிப்புக்கு இணையேதுமில்லை
அதைக் ​கேட்டதனால் மதியென் வசமில்லை
உன் பேச்சுக்கு நிகரேது இங்கே
அதை கேட்பதனால் தெவிட்டவில்லை எனக்கே

நீ ஓடியதால் உளம் குளிர்ந்தான் பாரதி
அதை கேட்டதனால்உளம் மகிழ்ந்தேன் மயங்கி
தாலாட்டே உன் அபிமானப் பாடல்
அதைப் பாட உன்னோடு நான்.சேரல்

நீ அழுதால் நான் அழுவேன்
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
செல்லமே என் மழலை நீ
செல்வமே என் உயிர் நீ

எழுதியவர் : ஜவ்ஹர் (16-Jan-14, 11:13 pm)
Tanglish : en mazhalai
பார்வை : 121

மேலே