ஒத்தயடிப் பாதயில
ஒடங்காட்டுல வெறகுவெட்டி
தலமேல தூக்கிவச்சி
ஒத்தயடிப் பாதயில
ஒருத்தியிவ போகயில
புஞ்சக்காட்டு வரப்புமேல
மறஞ்சிநின்ன காளயிவன்
சத்தங்கேட்டு எட்டிப்பாத்து
கிட்டவந்து பாக்கயில
அக்கம்பக்கத்துல ஆளுமில்ல
வழித்தொணைக்கும் யாருமில்ல
மெரண்டுபோன கன்னிப்பொண்ணு
இடைநெளிய நடைகூட்ட
நெத்திவேர்வ சொட்டிவிழ
சாந்துபொட்டு அதில்கரைய
பயந்துபோன அவளிதயம்
படபடவென துடித்திருக்க
கருப்பசாமி சுடலசாமி
வாருமென மனம்வேண்ட
நெருஞ்சிமுள்ளு காலில்தைக்க
ஆவென அவள்அலற
ஓடிவந்த காளயவன்
கால்புடிச்சி முள்ளெடுத்து
தங்கச்சிநீ பாத்துபோவென
பரிவோடு சொல்லிவிட
பயமெல்லாம் பறந்துபோக
பாசக்கார அண்ணே
போய்வாரேன் என்றுசொல்லி
பாவையவள் நடைதொடர்ந்தாள் ....!!