புதுப்புது முகங்கள்-கே-எஸ்-கலை

மனிதன்
விசித்திரமானவன் !
===
உலகில் நிறைய
கடவுளர் உண்டு...
ஒரே முகம்
ஒரே குணம்
ஒரே கொள்கை...
ஆனால் -
மனிதன் அப்படியில்லை !

முகங்கள்...
என்னைப் போல
இன்னொருவனிடம்
நானும்...
உங்களைப் போல
வேறொருவனிடம்
நீங்களும்...
இதுவரை கண்டதில்லை !
காரணம் -
மனிதன் அப்படித்தான் !

ஒரு புலியை
ஒரு சிங்கத்தை
ஒரு குரங்கை
ஒரு ஞமலியை
ஒரு பறவையை...
உங்களூரில் பார்த்தாலும்
எங்களூரில் பார்த்தாலும்
பல நேரங்களில் முகங்கள்
ஒரே மாதிரி இருப்பதுண்டு
ஆனால் -
மனிதன் அப்படியில்லை !

வேறு வேறு முகங்களில்
தாய்முகம்
சேய்முகம்
பேய்முகம்
நாய்முகம்
நோய்முகம்..
இப்படி சில
ஒத்த முகங்கள் காண்பதுண்டு...
காரணம் -
மனிதன் அப்படி தான் !

பூவின் முகம்
நிலவின் முகம்
சூரியனின் முகம்
மரங்களின் முகம்
பேசுவதெல்லாம்
ஒற்றை மொழி !
ஆனால் -
மனிதன் அப்படியில்லை !

இதுவரையுள்ளதும்
இனிவரப்போவதும்
புதுப்புது முகங்களே...

அகங்களும் அப்படியே...

காரணம் -
மனிதன் அப்படித் தான் !
===
மனிதன்
விசித்திரமானவன் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (19-Jan-14, 7:01 am)
பார்வை : 346

மேலே