சுகர் போதுமா இந்த படைப்புக்கு
அ-ழகைக் காட்டுங்கள் - அதோ
ஆ-காயம் விரிந்து கிடக்கு....! உயர எண்ணம் வரும்
இ-தயம் காட்டுங்கள் - இதோ
ஈ-ர்க்கும் வண்ணப் பூ இருக்கு- நறுமனம் பழக வரும்
உ-ண்மையைக் காட்டுங்கள் - அங்கே
ஊ-ர்க்கோடியில் விவசாயிக் குடிசை-உழைக்க எண்ணம் வரும்.......!!
எ-ழில் தமிழ் மொழியைக் காட்டுங்கள் - இங்கே
ஏ-காந்தமாய் எல்லோருக்கும் விழிகளில் வெளிச்சம் வரும்.....!!
ஐ-ம்புலன் அடக்கும் வழி காட்டுங்கள் - அதனால்
ஒ-ரு மனதாய் எண்ணுகின்ற உலகம் வரும்....!!
ஓ-டாமல் மனதை கட்டுப் படுத்துங்கள்
அஃ-தே, தவமின்றி வரம் பெறவே வழி வகுக்கும்..
( சுகர் - டாட்டா மட்டும் காட்டாது.....
சுகமான கவிதை எழுத விழியும் காட்டும்
எனவே - இப்படைப்புக்கு கரு
பிகர் - அல்ல - சுகர் )