சென்னை புத்தக கண்காட்சி

நான்குபேர் கொண்ட குழுவில்
நான்மட்டும் தனியானேன்
எனையறியாமல் எனைமறந்தேன்
புடவைக்கடைக்குள் புகுந்த
பெண் போல்..
அனைத்தையும் கேட்டு
அடம்பிடிக்கும் குழந்தைபோல்
அலைபாய்ந்தது மனது..
கடிவாளமிட்ட குதிரையாய்
கச்சிதமாய் செலவிட்டு
ஆறு முத்துக்களை
எனது சொத்தாக்கினேன்
இவ்வருடத்தை மெருகேற்றிட..
மீண்டும் மீண்டும்
பயணிக்க பேராசை.

எழுதியவர் : ஆரோக்யா (19-Jan-14, 6:28 am)
பார்வை : 169

மேலே