மனதில் உறுதி வேண்டும்

உலகமே
கட்டுப்படும் ஒரு
உண்மையான
அன்பிற்கு...

நல்லவனாக
வாழ்வதில் சிறந்த
வாழ்கையை விட
என்ன
இருக்கிறது..!

இன்பத்தை
நாடி தீயவனாக
இருப்பதில்
பயனில்லையே...!

நீ கடைசியில்
கொண்டு செல்வது
உனது
நன்மையையா.!!
அல்லது
தீமையையா..!!

துணிவுடன்
செயலாற்று - உன் துணிவு
உலகெங்கும் வலம்
வரட்டும்
பொறுமையுடன்
உறவாடு - உன் பொறுமை
யுகமெங்கும்
பரவட்டும்..

சுயநலம் அறிவை
மங்கச் செய்யும்
வல்லமை கொண்டது
பொதுநலம் அறிவை
ஒளிரச்செய்யும்
ஆற்றல் கொண்டது

நல்லவனாக
வாழும் உனக்கு
சோதனைகள்
வரும்
சிலநேரம்
வேதனைகளும் வரும்

துணிவுடன்
போராடும் உயிருக்கே
நிலையான
வாழ்க்கை..

வாழ்வில்
வெற்றிநடை போட்டிடு
சத்தியத்தை
என்றுமே நீ நிலை
நாட்டிடு
என் அன்புள்ள
மானிடனே..

எழுதியவர் : லெத்தீப் (19-Jan-14, 2:35 am)
பார்வை : 816

மேலே