+பல்லாயிதம்+

சிறு குழந்தைதானே
எதுவும் சொல்லலாம்
என மிரட்டிக்கொண்டிருந்தார்
ஒரு பெரியவர்!

சிறிது நேரம் வரை
புரிந்தது போல்
தலையாட்டிக்கொண்டிருந்தது!

பின்
அக்குழந்தையால்
பொறுத்துக்கொள்ள முடியவில்லை!

எடுத்தது அதனுடைய ஆயுதம்
ஒரே கடி!

பாவம் பெரியவர்
இப்போது குழந்தை போல்
அழுதுகொண்டுள்ளார்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jan-14, 12:01 am)
பார்வை : 144

மேலே