மன மாற்றம்
எப்போதாவது யாராவது
மதம் மாறுகையில்
பதை பதைத்துதான் போவேன்
தடுத்து நிறுத்திவிட எண்ணி
அரிசி பருப்பு
பணமெல்லாம் கிடைக்கும்
ஒரு வேலைக்கு மட்டும்
வறுமையும்
வசை சொற்களும்
தொடரும்
மாறிவந்தவனென்று
முன் தோல் நீக்குவதில்
முன்னணியில் இருப்பவர்கள் கூட
இருப்பதில்லை
முன்னுரிமை தருவதில்
இருக்குமிடத்திலிருந்து
போராடாமல்
மாறித்தான் என்ன பயன்
மனிதமற்ற மதங்களுக்கு.