ஆணவம்

எனக்கு
எல்லாம் தெரியும்
என ஒரு
நிலையற்ற
இதயம் இறுமாப்பு
கொள்கிறது

பறந்து செல்லும்
பறவையின்
திசையை
சொல்ல முடியுமா..!

விரைந்து
செல்லும் காற்றை
பார்த்துவிட
முடியுமா..!

காலங்கள்
செல்வதனால்
சூரியன்
தான்
மறைந்திடுமா..!

நேரங்கள்
கடப்பதனால் பகல்
பொழுதும்
மாறிடுமா..!

வந்த இடம்
எது.!!
சேரும் இடம்
எது..!!

உன்னை
வாழ வைப்பது
எது..!!
உன்னை
சாகடிப்பது எது..!

இரண்டிற்கும்
விடை தெரியாமல்
பதிலை
எதிர்பாக்கிறது
ஆணவத்தோடு

மரணத்தை
விரும்பாத மனம்
எப்படி மரணத்தை
தெரிந்து
கொள்ளும்..!!

உலகத்தை
வெறுக்காத உள்ளம்
எப்படி
உலகத்தை
புரிந்து
கொள்ளும்...!!

அன்பு அறிவை
மயக்குகிறது
முடிவில் உயிரை
குடிக்கிறது..

பாசம் கவலை
கொள்கிறது முடிவில்
வெறுப்பும்
அடைகிறது..

எத்தனை
பிறவி காண்பது..!
இவ்வுலகை
எத்தனை
நாள் ஏமாற்றுவது..!

காலம் தான்
இனி பதில் சொல்ல
வேண்டும்..

எழுதியவர் : லெத்தீப் (21-Jan-14, 8:56 pm)
Tanglish : AANAVAM
பார்வை : 1561

மேலே