மாமியார் புலி
ஒரு கணவனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம்.
ஒரு நாள் அவன் மனைவியையும் மாமியாரையும் கூட்டிக்கொண்டு ஊட்டி மலைப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றான்.
இருட்டிவிட்டதால் இரவு ஒரு மரத்தடியில் மூவரும் படுத்து தூங்கினர் .
நடுராத்திரி கண்விழித்த மனைவி அருகில் அம்மா இல்லாததை கண்டு கணவனை எழுப்பி, "ஏங்க அம்மாவை காணோமேங்க" என்றாள்.
கணவனும் மனைவியும் கையில் துப்பாக்கியொடு அவரை தேடி போனார்கள்.
ஒரு புதர் அருகே அம்மா நடுங்கியபடி நின்று கொண்டிருக்க எதிரே ஒரு புலி உறுமிக்கொண்டிருந்தது.
மனைவி சொன்னாள்,
ஏங்க இப்ப என்ன செய்வது?" என பதறினாள்.
அதற்கு அந்த கணவன் சொன்னான்,
ஒன்றும் பயப்படாதே, புலிக்கு தெரியாத காடா? அதுக்கு வழியெல்லாம் தெரியும் , எப்படியாவது அது உன் அம்மாவிடமிருந்து தப்பித்து ஓடி விடும் !!