வாக்கு சேகரிப்பதில் புதுமை
தலைவரே, தேர்தல் நெருங்கி வருது.
தலைவரே, வாக்கு சேகரிப்பு புதுமையா
இருக்கும்னு சொன்னீங்க. புதுமைன்னா?
@@@@@
தலைகீழா நடந்து போய் வாக்காளர்கள்
காலில் விழுந்து பாதபூசை பண்ணி
வாக்குச் சேகரிக்கப் போறேன். விருப்பம்
உள்ள நம் கட்சித் தொண்டர்கள் என்னைப்
பின்பற்றலாம்.
@@@@@@@
புதுமையிலும் புதுமை தலைவரே உங்கள்
உத்தி. ஆறு கோடி வாக்காளர்
வீடுகளுக்கும் தலைகீழா நடந்து போக
பல ஆண்டுகள் ஆகுமே?
@@@@@@@
நான் என்ன முட்டாளா? ஒரு தெருவில்
மட்டும் தலைகீழா நடக்கிறதே போதும்.
அதை படமெடுத்து
தொலைக்காட்சிகளிலும் மாநிலம்
முழுவதும் பிரச்சார வண்டிகள் மூலமும்
காட்டப்படும். அது போதும் நம்ம
வெற்றிக்கு. உலகத்தில் யாரும் செய்யாத
புதுமைடா புலிவேந்தா.