நம் தமிழ் இனம்
செந்தமிழ் என்னும் பரம்பரையில் நம் தமிழ் மொழியும் சந்ததியாகி உள்ளது. இந்த பெருமையை தனதாக்கி கொண்ட இனம் இன்று அடையாளப்படுத்தப்படுவதில் பல சிக்கல்களை எதிர் நோக்கிய வண்ணம் பயணிக்கின்றது. இனம் என்ற போர்வையில் பிதற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமுகமாக இன்று பலரால் நோக்கப்படுவது நம் தமிழினமே ஆகும். ஆனால், சங்ககாலம் தொடங்கி இன்று வரை இலக்கிய வாழ்கை வாழ்வது நம் இனமே. இனி வரும் காலங்களில் நமது இனம் சில உல் துரோகிகளால் அழிவது நிச்சயம் என்ற கருத்துக் கணிப்பும் இடம் பெற்றுள்ளது. இருந்த போதிலும் நமது இனம் ''யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்ற கோட்பாட்டை சொந்தமாக்கி கொண்டது. இனி வரும் சந்ததிகளின் ராஜ்யத்தில் தமிழினம் என்னவாகும் என்பது கேள்வி குறியே ஆகும்.