போனபடி

ஒரு பட்டாம்பூச்சி,
நிறங்களை உதிர்த்துவிட்டுப்போனது !
நீ கலங்கி ஓடிய அவ்வமயம் !
நெஞ்சை நெருங்கி,
ஒரு கொனூசி தைத்தது !
அது பார்த்து கலங்கி ,
இமை மூடிய சமயம் !
அழவைப்பது நோக்கமாய் இருக்கவில்லை !
ஆற்றுப்படுத்தவே வந்தேன் !
எது நடந்து என்னவானதோ !
வெளிரிவிட்டதே நம் வானம் !
செய்தது முறையென்று இல்லை !
அதனினால் ,
நான் சிறைக்கம்பிகளுகுள்ளே,
மொத்தமாய் சத்தமில்லாமல் சிறகு சுருக்கி !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (24-Jan-14, 8:10 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 57

மேலே