பாரி
அன்பர்களே, இது ஒரு வில்லங்கமான பதிவுதான்.
என் மனத்தில் ஓடும், வெளியே சொல்லத் தயங்கிய, எண்ணங்களை, என்னுடைய F B சுவற்றில் கூட பதியாமல் வேறு என்ன செய்வது ?
கடையேழு வள்ளல்களில் முல்லைக்குத் தேர் ஈந்த பாரி வள்ளலைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீரகள்.
பாரி ஒரு சமயம் ஒரு முல்லைக் கொடி, படர்வதற்கு கொழுகொம்பின்றி தவித்ததைக் கண்டு மனம் பொருக்காமல் தன் தேரை அந்த முல்லைக் கொடிக்கு ஈந்துவிட்டு சென்றான்.
பாரி நல்ல இளகிய மனம் கொண்டவன். அவன் ஒரு சாமான்ய மனிதனில்லை. ஒரு அரசன்.
முல்லைக் கொடி, படர்வதற்கு கொழுகொம்பின்றி தவித்ததைக் கண்டு, ஐநூரோ, ஆயிரமொ பொற்காசுகள் செலவு செய்து பந்தல் போட்டான் - என்றால் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் பாரியின் செய்கையில் என்னால் வள்ளல் தன்மையைக் காண முடியவில்லை.
இவ்வளவு காலமாக பல்வேறு நூல்களிலும், பெரியோர்களாலும் பாராட்டப்பட்ட விஷயத்தை மறுக்கின்றாயா நீ என்ன அவ்வளவு பெரிய .......... ( இந்த இடத்தில் எவ்வளவு மோசமான கெட்ட வார்த்தை வேண்டுமானாலும் போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள் )” என்று கேட்பவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் எனது எண்ணத்தப் பதிவு செய்கிறேன்.
பாரி ஒரு அரசன். அவனிடமிருக்கும் செல்வங்கள் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணமே. ஒரு முல்லைக் கொடி தவிக்கறதென்று தன் தேரைக் கொடுத்தானென்றால் அவனை என்ன வென்று சொல்லுவது ?
போலித்தனமின்றி உண்மையை சொல்ல வேண்டுமென்றால்.......
அதில் வள்ளல் தன்மை தெரியவில்லை.
“ திமிரும் “ “ தெனாவெட்டும் “தான் தெரிகின்றது.
ஒரு பெரியவர் இப்படி சமாளிக்கின்றார்
“ முல்லைக் கொடிக்குப் போய்த் தேரை வழங்குவதா என்கிறீர்களா? எதற்கு எதைக் கொடுப்பது என்று தெரியாத
இந்தத் தன்மைக்குத்தான் "கொடைமடம்" என்று பெயர்.”
மடமை சாமான்ய மனிதனுக்கு இருக்கலாம். அது அரசனுக்கு இருந்தால் அரசு சீரழியும்.
பிற்காலத்தில் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை ஆகியோர், பரம ஏழ்மையில் உழன்று, தங்களிடம் இருந்த ஒரே நீல சிற்றாடையை, மழையில் நனைந்து வந்த ஔவைக்கு தந்தனர்.
அந்தப் பெண்களின் நிலமைக்கு அவர்களின் தந்தை பாரியின் “ திமிரும் “ “ தெனாவெட்டும் “தான் காரணமோ ???
பாரிக்கு யாராவது வக்காலத்து வாங்கி வந்தால் அவர்களிடம் நான் கேட்பது
1. இன்றய அமைச்சர்கள் யாராவது இதுபோல் முல்லைக் கொடிக்கு தன்னுடைய காரை கொடுத்தால்...... தங்கள் கருத்து என்னவாக இருக்கும் ?
2. இளகிய மனமுடைய நண்பர்கள், இதுபோல் முல்லைக் கொடி தவிப்பதைக் கணடால், தனே உட்கார்ந்து ஒரு கொழு கொம்பு ஊன்றுவீர்களா ? இல்லாவிடில் "கொடைமடம்" கொண்டு, தன்னுடைய TWO WHEELER - ஐ அல்லது FOUR WHEELER - ஐ அளித்து “சத்திரத்தில்” மனினிக்கவும் “சரித்திரத்தில்” இடம் பெருவீர்களா ???
தங்கள் கருத்துக்கள் எதுவாயினும் பதிவு செய்யுங்கள் நண்பர்களே.