வளர்ச்சியின் விலாசமே

பெண் என்று பிறந்தால்
திருமகள் என்று கொள்வீர்
அவள் ஒரு விருத்தி என்று தெளிவீர்

அவளின் அழகு எங்கும் பொங்க
செழுமையின் உட்கோடுகள் நிரம்ப
வளர்ச்சியின் விலாசமே அவள் தான்.

மனை வாழ அவள் துணை பெரிது
இனம் பெருக அவள் தன்மை பெரியது
நாடு வளர அவள் பங்கு பெரிதாக,பெருமையாக .

தாயைப் போல பிள்ளை என்பது முது மொழி
ஆக்குவதும் அவளே அழிப்பது அவளே என்ற அடுத்த மொழி
பெண்ணின் மாண்பை பறைசாற்ற பலவித பழமொழி.

பெண்ணினத்தைப் பழிக்காதீர் என்றும் எப்போதும்
பெண் இல்லையெனின் உலகம் இல்லை
ஆண் இருந்து பெண் இல்லையென்றால்
யாதும் இல்லை என்று காண்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (25-Jan-14, 7:46 pm)
பார்வை : 1036

மேலே