எங்கே தண்ணீர்ப் பந்தல்

கிணற்று நீர் இனிப்பு
குடிப்பதற்கு
ஆற்று நீர் நன்று
துவைப்பதற்கு
குளத்து நீரை
தேத்தி சமையலுக்கு
விருந்தினருக்கு முதலில்
குளிர்ந்த நீர் எனறு உபசரிப்பு
என்று பேசிய காலம்
இன்று இல்லை

இன்று நீர் குடுவையிலெ
வீடுகள் தோறும்
பெரிய குடுவைகளை
கவிழ்த்து வைத்து
மற்றொன்றில் வடிய
குழாய் வழி பிடித்து
உபயோகப்படுத்தும் காலம்
கைகளில் அருந்தும் நீர்
சிறிய பெரிய போத்தல்களில்
எல்லாமே காசுக்கு.


இனி எங்கே உபசரிப்பு ?
இனி எங்கே தண்ணீர்ப் பந்தல்?
குளங்கள் கட்டிடமாக மாற
ஆறுகள் வற்றி காய்ந்து
மணல் வாரப் பயன்பட
கிணறுகள் மூடப்பட்டு
ஐநூறு அடி , ஆயிரம் அடி
என்று ஆழ்குழாய் கிணறுகள் தோண்ட
நிலத்தை ஏகமாகச் சேதப்படுத்தி
விளைவித்தக் கொடுமை
கண் கொண்டு பார்க்க முடியவில்லை,.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (26-Jan-14, 7:02 am)
பார்வை : 1997

மேலே