நானும் நீயும்
நானும் நீயுமாக வாழ்ந்து
நம்மிடையே மூவரும் பிறந்து
வளர்ந்து உயர்ந்து பின் பிரிந்து
நம்மை வீட்டுச் சென்று
பறந்து ஓடி வாழும் நிலை
இன்று நமக்கு ஏற்பட்டு
திரும்பவும் நானும் நீயுமாக
வாழ்கிறோம் மிஞ்சின காலத்துக்கு
இது தான் நம் வாழ்க்கை.
காலம் ஓடுகிறது வேகமாக
முடிவை எதிர் பார்த்து நிற்கிறோம்
நானும் நீயுமாக