என் காதல் நாயகனே
சூரியன் மறைந்ததும்
தோன்றும் நிலவு,
பனித்துளியாய்
உன் பார்வை என்மேல்
படர்வதாய்
நினைவுகள்...!
மருதாணி இலை
துளிர்க்கும் போதெல்லாம்
உன் பெயரை
அங்கம் முழுவதும்
கிறுக்கி கொள்ளும்
ஆசைகள்.....!
கடல் அலைகள்
ஆர்பரிக்கும்
நேரங்களில்
உன் தோள் தேடி
என் கால்கள்
சுகமாய் நடந்த
பொழுதுகள்....!
சிறு குருவிகள்
சேரும் காலங்களில்
உன் அன்பால்
மழைச்சாரலில்
நனைந்த
தருணங்கள்....!
மயக்கும் மாலை
மேகங்களின்
அணிவகுப்பில்
கொஞ்சம் வெட்கத்துடன்
நானும்
கொஞ்சம் தயக்கத்துடன்
நீயும்
நம் விரல்கள்
கோர்த்த ஒருசில
நிமிடங்கள்...!
மழலைகளின்
மொழி கேட்கையில்
உன் பொல்லாத
விழிகளில்
ஐந்நூறு கவி
பேசிய
கதைகள்.....!
என் காதல்
கதையின் நாயகனே...!
உன் சிறு பிள்ளை குணத்தில்
உன் தாயாகிறேன்...!
நெஞ்சுக்குள் உன்னை சுமாப்பதனால்
நானும் உன் தாயே..!
உன்னை தவிர
வேறொருவனுக்கு
என் கனாவில் கூட
இடமில்லை..!
என்னை தவிர
வேறொருத்தியை
உன் கண்கள்
ரசித்ததில்லை..!
உனக்காக காத்திருக்கும்
இந்நாட்களில்
நிஜமான நேசத்தை
உணரவைத்தாய்...!
நீயில்லாமல்
நானில்லை என
உணரவைத்தாய்....!
வாடிய பூக்கள்
வானுயர பூக்கும்...!
ஒளிக் கதிரும்
நொடியில் நிழலாகும்..!
மினுக்கும் தங்கம்
விலை குறையும் ...!
உன்னோடு நான்
வாழ்ந்திருந்தால்!!