வானவில்லில் இசை மீட்டும் வண்ணக் கவிதை இது

வானவில்லை வளைத்து கவி
வரிகளை வைத்து நாண் கட்டினேன்...

வஞ்சி அவள் குனிந்து உவமை
வழங்கவே தன நாணம் காட்டினாள்....

மீட்டிய இசை காதல் - அது
காட்டிய ஸ்வரம் இன்பம் - மனம்
மாட்டிய சிறை இவள் நகை - அடடா
மனம் மயக்குகிறாள் நறுமுகை....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Jan-14, 8:49 pm)
பார்வை : 103

மேலே