என் காதலி நீ வருவாயோ

ஒவ்வொரு காதலும் வாழ்கிறதே
பிரிந்தாலும் மனத்தால் பிரியாத
உண்மை கண்ணான காதல் பல பல
தோற்று போன காதல் என்கிறாய்
காதல் எப்போ தோற்றது சொல்லடி

காதலுக்காக வாழ்கிறாய் கண்கள் எங்கு
கண்கள் தேடும் தேடலுக்கு விடையேது
குத்தும் விழிபார்வையால் வந்து சென்றவளே
தம்மடித்தே குறுகிப் தான் போனேன் நானோ
பிரம்பான என் உடலோ நூலாகி போனதேனடி

அன்று மண் புழுதி சாரல் பலமாக அடிக்கவே
உன் நினைவில் என்னை நானே மறந்தேனே
விடிவு ஒன்றுக்காய் தினம் காத்திருக்கிறேனடி
காலையில் விடி வெள்ளியாய் வந்திடாயோ
என் இதயத்தில் விளக்கொன்று ஏற்ற நீ வருவாயோ

லூசு லூசு என்றே என்னை நீயும் கடிந்தாய்
இன்று லூசுபயலாகவே மாறி சுத்துகிறேனடி
காத்தாடி வாழ்கையிலே வலிகள் நிறைந்ததோ
என் கண்ணானவள் நீயே அணையாத சுடரோ
அன்று உன்னருகில் நானோ கல்வி கற்றேனே

இன்று நானோ தெருவில் உன் நினைவுகளுடனே
உன் நினைவில் தினம்தினம் கரைந்து போகிறேனடி
என் ண்ணீரில் தினம்தினம் கோலம் போடுகிறேனடி
என்வீட்டுவாசலில் மாக்கோலம் போட வருவாயோ
காலங்கள் பல மாறினாலும் என் இதயம் உனக்காகவே
தங்க தேராக வருவாயோ இல்லை என் காதலியாக வருவாயோ

எழுதியவர் : (27-Jan-14, 3:35 am)
பார்வை : 83

மேலே