என் உயிர் நட்புக்காக

நட்பு என்ற புனிதத்தை கெடுக்காதீர்கள்
அன்பான நட்பை ஏளனம் செய்யாதீர்கள்
விலை மதிக்க முடியாதது உயிர் நட்பு

உண்மைக்கு புறம்பாக நடக்காதீர்கள்
இனம், மதம், மொழி பார்க்காதது நட்பு
மனதில் தளரா உறுதி கொள்ளவேண்டும்

உண்மைக்காக என்றுமே உண்மையின் பக்கம்
நிதானம் தவறாது தலை சாய்க்க வேண்டும்
உண்மையான நட்பை சந்தேகம் கொள்ளலாமா

பூ சூட உன் காது பிள்ளையார் காதும் இல்லை
பொறுமையை இழக்க நான் அடிமையும் இல்லை
வெட்டி பேச்சு பேசி வீண் வம்பை வளர்ப்பது ஏன்

உண்மையான நட்பு ஆண் ,பெண் வித்தியாசம்
என்றென்றும் பார்ப்பதில்லை என் உயிர் நட்பு
உண்மை நட்பு என்றுமே அன்பானது புனிதமானது

என் உயிரானது நட்பு என்றென்றும் அன்புடன் வாழும்
தவறு இல்லையாயினும் மன்னிப்பு கேட்பது நட்பு
அன்பின் நந்தவனத்தில் நட்பே உயர்ந்தது சிறந்தது.

எழுதியவர் : (27-Jan-14, 3:32 am)
பார்வை : 258

மேலே