பாதைகளும் பயணங்களும்

முடிவுகள் அல்ல தோழா - இங்கே
முயற்சிகள் தான் பேசப்படுகின்றன!

மாற வேண்டியது நீ மட்டுமல்ல ,
உன் பயணப் பாதையும் தான்..
சேரும் இடத்திலல்ல - எப்போதும்
செல்லும் வழியில் கவனம் வை!

விழுதுகளை வேராக்கி நின்று
வியக்க வைக்கும் ஆலம் போல்..
ஒவ்வொரு முயற்சியிலும் உன்
திறமைகளைக் காட்சிப்படுத்து...
நழுவிச் செல்லும் வெற்றிகளை
கட்டி இழுக்கும் கயிறுகள் அவை..

வெற்றி இப்போதில்லை என்றால்
எப்போதும் இல்லை என்பதல்ல,
மற்றொரு பாதை உனக்காகக்
காத்திருக்கிறது என்பது தான்..

பயணங்கள் என்றும் தொடரட்டும்
உள்ளம் குளிரும் வெற்றிகளோடு!

எழுதியவர் : சஹானா (27-Jan-14, 6:56 am)
பார்வை : 106

மேலே