வெண்மையின் பிறப்பிடம்

நதி நீரை
கூவ மாக்கி
அதன் மேலெழுப்பிய
உயர் பாலத்தில்
இறக்குமதி வாகனத்தில்
ஊர்ந்து போகும்
வெள்ளாடை உடுத்திய
வேடர்களே !

நாசி அடக்கி
கடந்து போகும்
நாணயக் காரர்களே !

சற்று நின்று
விழியும் நாசியும்
திறந்து பாருங்களேன் !!

உமது அங்கிகளின்
கறைகள் சலவை பெறுவது
இக்கூவத்தின் கரையில்
தானைய்யா வேடர்களே !!

எழுதியவர் : பாவூர்பாண்டி (27-Jan-14, 7:10 am)
பார்வை : 53

மேலே