ரசிகனாக மாறு - ரசிக்கப் படுவாய்

கவிதைகள் எழுதும் வானம்
காலையில் எழுந்தால் புரியும்
கனவுகள் எழுதும் வண்ணம்
கவலைகள் மறந்தால் தெரியும்
உணர்வுகள் முழுதும் என்றும்
ஊடுருவும் மகிழ்ச்சி புரியும்
உண்மை ரசனை பெருகும் - இனி
உன்னையும் உலகம் ரசிக்கும்....!!