பாடிடும் குயிலே பேசிடு தமிழே

தேசியப் பறவையே - உணர்வில்
தென்றல் வைத்த தேகமே....!!
குடியரசுத் தினத்தன்று
கொடிவணக்கம் செய்து விட்டு
குளிருக்குப் போர்வைஎன
கொடியதை பயன்படுத்தும்
கூறில்லா மாந்தர்போல அன்றி....
கொண்டாடி மகிழ்கிறாயோ
குவித்தே கொடி வண்ணம் உன்னில்...!!
நாட்டுப் பற்று அது
நம் குருதியில் கலக்க வேண்டுமென்று
நாளும் பொழுதும் நயமாகப் பேசி
நாட்டுச் சரக்கை நாவினில் ருசித்தே
நடுநிலை தவறும் மாந்தர் போலன்றி
நளினமாய் ஆடி நீ நம் நாட்டை அலங்கரிக்கிறாயே
சாதி வண்ணம் ஒழிய வேண்டும் - மயிலே
சகோதரத்துவ வண்ணம் மட்டும் வேண்டும்
சாமி என்றால் என்ன என தெரிய வேண்டும்-அது
சராசரி மனிதன் உருவில் மிளிர வேண்டும்...!!
மேடைப் பேச்சி ஒழிய வேண்டும்
மெல்ல மனிதம் மலர வேண்டும்....
கூடை மலர் வாசம் போலே
கூடும் மன நேசம் வேண்டும்....
ஒருமித்த எண்ணம் வேண்டும்
உயர்வு தாழ்வு ஒழிய வேண்டும்.....
உயிர்களிடம் அன்பு வைக்கும்
உண்மை உணர்வு பெருக வேண்டும்....
ஆடிடு மயிலே
பாடிடு தமிழே
கூவிடும் குயிலே
குழலிசை உனதே.....