தூய தடாகம்புது மனம்
தூய தடாகங்கள்
அமைத்தனர் ஆன்றோர்.
மக்களும் பயிர்களும்
புள்ளினங்களும் கால்நடைகளும்
வாழ்வு நடத்த.
குளம் சுத்தமாக வேண்டி
மீன்களையும் வளர்த்தனர்
உருமீன்களின் கழிவுகள்
தடாகத்தில் வண்டலாக.
கோடையில் வண்டல் எடுத்து
வயல்களுக்கிட்டு
மண்வளம்கண்டனர்
அடுத்த மழைக்கு
சுத்தநீர் குளங்கள் தயார்.
அதுபோலவே!
மீன் போன்றதொரு
தியான மனப்பயிற்சிகளால்
திறந்த வெளி
எனும் மனங்களின்
தெளிந்த நீர்க்குளத்தில்
ஆனந்த மழைச் சாரல்
பொழிய மறுப்பார் எவர் ..?.