வேண்டாம் vs வேண்டும்

வேண்டாமே .................
பசிக்காமல் புசித்தல்
வியர்க்காமல் உழைத்தல்
பொறுக்காமல் பொங்குதல்
துஞ்சாமல் துவளுதல்
அனுமதில்லாமல் நுழைதல்
பெற்றோரை வெறுத்தல்
பெரியோரை அவமதித்தல்
கல்லாமல் இருத்தல்
களிக்காமல் கழித்தல்
வரியோரை இகழ்தல்
சம்மந்தமின்றி குறுக்கிடுதல்
கடமைலிருந்து பின்வாங்குதல்
மாற்றான் மனைவியை கைப்பற்றுதல்
போலியாக வணங்குதல்
வேண்டுமே.......
நோயின்றி வாழ்தல்
மூடநம்பிக்கையை அவிழ்த்தல்
அடிமைத்தனத்தை கொல்லுதல்
தவறுக்கு வருந்துதல்
பகைமை மறந்து அன்புகாட்டுதல்
எண்ணியதை அடைதல்
தற்பெருமையை கைவிடுதல்
நல்லவற்றை பாராட்டுதல்
தீயவற்றை எதிர்த்து போராடுதல்
பசித்தவனுக்கு உணவளித்தல்
நோயாளியை நலம் விசாரித்தல்
வேதம் ஓதுதல் ......................

எழுதியவர் : kanamani (27-Jan-14, 2:00 pm)
சேர்த்தது : Kanmani
பார்வை : 227

மேலே