எங்கள் பாரத நாடு

பல் கவிகள் விளைந்த காடைய்யா
நல் தலைவர் தோன்றிய நாடைய்யா
எண்ணிலடங்கா மொழிகளைய்யா
விதம் விதமாய் மதங்களைய்யா

வீதிக்கொரு சாதியய்யா
சாதிக்கொரு சங்கமைய்யா
ஒற்றுமை கண்ட சோலையய்யா
பல் வண்ணப்பூக்கள் மாலையய்யா

வடக்கில் அரசன் இமயமய்யா
தெற்கில் அரசி குமரியய்யா
முக்கடல் தழுவும் தரையய்யா
எங்கள் நாட்டு கரையய்யா



கடையில் கிடைக்கா பொன்னையா
அது பாரத நாட்டு மண்ணையா !!

எழுதியவர் : பெருமாள் (27-Jan-14, 4:41 pm)
சேர்த்தது : பெருமாள்
பார்வை : 1724

மேலே