வேண்டுதல் - அமிர்தா

அப்பா கருப்பா
என் குல தெய்வமே முனியாண்டி
காத்து கறுப்பு அண்டாம
காத்திரனும் கருணையப்பா
எங்க ஆட்டு இனம் அழியாம பாத்துகடா சாமி
வருஷ ரண்டுன்னு மனுசங்கள
பலி தரோம்!,

மலைதாங்கும் மாதேஸ்வர
மலைகள் மாண்டு போனதே
குருவி உக்கார மரங்கள் இல்லையே
தெய்வமே - மரங்களும் நடுங்குகின்றது
மதி கெட்ட மக்கள்
வெட்டி தள்ளுவதால்,

காடுகளை காப்பாத்து
வருடம் நாலு - என்ற
கணக்கிலே பலி கொடுக்கிறோம்
மனிதர்களையும் நாங்களும்.

எழுதியவர் : Amirthaa (27-Jan-14, 5:40 pm)
பார்வை : 207

மேலே