தாகம்

நா வறண்டால்
தண்ணீர் குடிக்கலாம்

பார்வை வறண்டால்
குழந்தைகள் ரசிக்கலாம்

சத்தம் வறண்டால்
இசையில் நனையலாம்

சுவாசம் வறண்டால்
பூக்களை நுகரலாம்

ஸ்பரிசம் வறண்டால்
எதிரினம் இணையலாம்

ஐந்தில் எது வறண்டாலும்
தாகம் தீர்க்க தடையேதுமில்லை..

இருந்தும் பரிதவிக்கிறேன்
என்னிலையை பரிசீலிக்கிறேன்

இன்று தான் கண்டுகொண்டேன்
தாகம் புலனில் அல்ல,
என் மனதில் என்று.

அதை தீர்க்கும்
வேகத்தோடும் வேட்கையோடும்
புதிய விடியலை நோக்கி விரைகிறேன்!!

எழுதியவர் : அகமுகன் விஜய் (28-Jan-14, 2:25 am)
Tanglish : thaagam
பார்வை : 289

மேலே