மெல்லிய மலர் ஒன்று கண்டேன்

மெல்லிய மலர் ஒன்று கண்டேன் - அதன்
மேனியில் மெல்லவே கவி எழுதி வைத்தேன்
வந்து தெரிந்தது அவள் முகம் - புன்னகை
வரிகளில் மலரென்றும் கனியென்றும் உண்டோ..?
லல்லல்-லா..!
லா லா லா.....!!
லாலா - லாலா....!!
ஆம்.......மகா கவியே
உமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை......
காதல்........
வீரத்தையும் மென்மையாக்குகிறது......
அதனால் உங்கள் உணர்வுகளில் இருந்த
அக்கினிக் குஞ்சை அழகிய மலராக்கி விட்டேன்
வெந்து தணியவில்லை காடு - என் நினைவில்
விளைந்ததே காதல் பூங்கா அவள் நினைவில்....
கண்ணம்மாவின் காதலரே - என்
கவிதையை மன்னியும் தவறு இருந்தால்........