கடைக் கண்ணில் உடைத்துவிடு பெண்ணே
![](https://eluthu.com/images/loading.gif)
கனவுகள் காணவில்லை பெண்ணே
உன் கண்களைக் கண்ட பின்னே..!!
நினைவுகள் மீளவில்லை பெண்ணே
உன் பார்வையில் விழுந்த பின்னே..!!
பூக்களை இரசிப்பதில்லை பெண்ணே
உன் புன்னகை பார்த்த பின்னே..!!
பூமனம் காணவில்லை பெண்ணே
உன் கால்தடம் தொடர்ந்த பின்னே..!!
இமை வலையில் உயிர் பிடித்துச் சென்றாய்
நடை மொழியில் வினா மிதித்துச் சென்றாய்
கடைக் கண்ணில் (காதல்) கல் ஒன்று வீசி
விடை உடைத்துச் செல்லடி என் பெண்ணே !!