தேடினேன்

புன்னகை பூக்கும் பூக்களில் தேடினேன்
மெல்ல தவழும் தென்றலில் தேடினேன்
அழகாய் சிரிக்கும் வண்ணங்களில் தேடினேன்
ஆர்ப்பரிக்கும் அருவியில் தேடினேன்
பாசம் மிகுந்த பசுமையில் தேடினேன்
ஆகாயத்தின் அழகில் தேடினேன்
நிலவில் தோன்றும் பனியில் தேடினேன்
மூச்சுக்காற்றின் வெப்பத்தில் தேடினேன்
அன்பே நீ அருகில் இருந்தும் கனவில் தேடினேன்

எழுதியவர் : ஜோதி ஜெயராம் (28-Jan-14, 12:36 pm)
சேர்த்தது : Jothi. J
Tanglish : thedinen
பார்வை : 122

மேலே