உனக்காகவே
விழித்திருந்தேன் அன்பே !
விண்ணில் நீ நிலவாய் இருப்பாய் என்று
தவமிருந்தேன் அன்பே !
தங்க தேரில் வலம் வருவாய் என்று
நினைத்திருந்தேன் அன்பே !
நிஜத்தில் என்னை பிரியாதிருப்பாய் என்று
நீ வரும் பாதை பார்த்திருந்தேன் அன்பே !
பகலவனை காணும் மலர் போல
உன் வருகைக்கப்புறம்,
நான் கிடக்கிறேன் வீதிஓரம் வீசிய பூ போல
மறந்தும் விழிமூடவில்லையடி !
நீ என்னை மறுத்தபோதும்
காத்திருப்பேன் அன்பே !
என்றாவது கிடைக்கப்போகும் உன் பார்வைக்காக
நீ பார்க்கும் நேரம்
நான் கருவில் இருந்தாலும்
கல்லறையில் இருந்தாலும்
துடித்திருப்பேன் அன்பே உனக்காக!

