என் இதய விருப்பம்

என் அன்பு காதலனே
கேள்.. இன்னும் அதிகமாய்
என்னை காதலி இன்னும் ஆர்வமாய்
என் இதயத்தின் விருப்பத்தை
உனக்கு வரி வரியாய் சொல்லுகிறேன்....
அதிகாலை கதிரவன்
அந்திநேர சந்திரன்
இரவுநேர விண்மீன்கள்
மழை நின்றபின் இலை சிந்தும் துளி
துயில் எழுப்பும் குருவிசத்தம்
அன்பு மழலையின் ஆசைமுத்தம்
சத்ததுடன் பெய்யும்மழை
உறங்காமல் அடிக்கும் அலை
பனிமூடிய அதிகாலை
பாலைவனத்தில் ஒரு சோலை
நிலவொளியில் மெல்லிசை
மாலைநேர குயிலோசை
உன்னோடு சேர்ந்து ரசிக்கும் நிலவு
சந்தோஷம் தரும் பல வண்ண கணவு
காலை நேர கடற்கரை காற்று
ஆள் இல்லா சாலையில் சிறு ஓட்டம்
தொலைதுார பைக் பயணம்
என்னோடு மட்டுமே நீ செலவிடும் உன் விடுமுறை நாள்கள்
உன் கைபிடித்து நனைந்து கொண்டே மழையில் நடப்பது
விடைபெறும் மாலை கதிரவன்
நிலவொளியில் உணவருந்துவது
பொய்யுரையாத உதடுகள்
கள்ளம் களைந்த கண்கள்
அசலான புன்னகை
புன்னகை சிந்தும் உன் இதழ்கள்
பொறுமைக்காக்கும் குணம்
என்னை நேசிக்கும் இதயம்
என்னை மட்டுமே நேசிக்கும் இதயம்
துரோகமில்லா நம்பிக்கை
விரும்பும் போதெல்லாம் இறைவழிபாடு
வானம் சிந்திய நீல நிறம்
கடற்கரையில் என் பாதசுவடுகள்
நான் உனக்கு நல்ல மனைவியாக அல்ல
நல்ல காதலியாகவே இருக்க விரும்புகிறேன்
தேடலும் புரிதலும் வாழ்கைக்கு இன்பம்
நம் வாழ்வும் அவ்வாறே...
இன்னும் நிறைய இருக்கிறது
எனது இதய விருப்பங்கள்
எழுத வார்த்தையில்லை
நேரில் சொல்கிறேன்.......

எழுதியவர் : ரம்யா எம் ஆனந்த் (28-Jan-14, 12:16 pm)
Tanglish : en ithaya viruppam
பார்வை : 134

மேலே