போய் வரவா

நாட்களும்
சக்கரம் பூட்டிக்கொள்ளும்
நிமிடங்களும்
காற்றாய் மாறி
மறைந்தே போகும்

அன்பே..!
வசந்தம் மாறி
கோடையும் வரும்
கண்ணீர் ததும்ப
அனுமதி பெரும்
நாளும் வரும்
கண்மனியே..!
காத்திருக்கிறேன்
நிரந்தரமாக உன் மடியில் உறங்க
காத்திருக்கிறேன்..

கட்டியனைத்தப்படி
கண்ணீரில் விடை சொல்வோம்
விரல் பற்றியபடி
கண்கள் மீண்டும் அணைக்க ஏங்கும்
நடந்து செல்லும் ஒவொரு அடியும்
இட்ட அடி கொப்பளித்துப் போகும்

திரும்பி , திரும்பி பார்த்தபடி
உடல் மட்டும் முன்னே செல்லும்
உயிரை உன்னிடம் கொடுத்து விட்டு
வெறும் உடல் மட்டும் விண்ணில் பறக்கும்

கண்ணீர்த் துடைக்க யாருமின்றி
கண்ணீரே கண்ணீர் துடைத்து ப் போகும்
காதலியே..!
கண்ணீரோடு விண்ணில் பறப்பேன்
கட்டியணைக்க ஏங்குவேன்
மீண்டும் வசந்தம் வரும்
காத்திருப்பேன்

மீண்டும் உயிர் மாற்றி
உடல் மாற்றி விளையாடலாம்

ப்ரியன்

எழுதியவர் : அசோக் priyan (29-Jan-14, 5:46 pm)
சேர்த்தது : அசோக் பிரியன்
பார்வை : 121

மேலே