தீண்டாதே தீண்டாதே

கோபத்தில் நீயும் மெளனம் கொள்வாயா.
நா விட்ட சொல்லை திருப்பி எடுக்க முடியுமா.
நட்புக்குள் விட்டு கொடுபாய் , தவறில்லையே.
இனிய நட்பை தீண்டி. சாதிப்பது என்ன உண்டோ.
பெண் கையில் சிக்கி .கபடி ஆட்டம் பல ஆடாதே.
இன்று வெளிச்சம், நாளை இருள்ளாகலாம். நிஜம்.
நரம்பில்லா நாக்கினால்,யோசிக்காமல் பேசிடாதே.
நாவினால் சுட்ட தீ. அது தான் .காயப்பட்ட வலி தீருமா.
கோபம் எதற்கு. பொய்யான பரப்புரை எதற்கு.
நட்பை விற்று. என்ன லாபம் உண்டோ சொல்.
வாழும் வாழ்க்கை ஒரு தரமே, வாழ்ந்து பார்.
தமிழனாய் தலை நிமிர்ந்து வாழ்வாய் பாரிலே.
கை கொடுக்கும் உயிர் நட்பு. கலங்கள் ஆகுமா.
உண்மையாக நீ இருந்தால்,எதையும் எதிர் கொள்.
கண்ணை மூடாது என்றும் விழித்து கொள்வாயா.
தீயவை , பொறாமை அறவே நீ நீக்கி விடுவாயா.
இவ்வுலகில் நேர்மையாக,துணிவுடன் நீ நடந்தால்
உன்னை மதிப்போர் பலர் உண்டு. நீ அறிவாயோ ...
நட்பு முகம். என்றும் மனதிலிருந்து மறைவதில்லை..
உண்மை நட்பே. இவ் உலகில் மிக மிக சிறந்தனவே ..
(நாக்கை அடக்கி கோபத்தை தணிக்க பழகுவோம் )