கிராமம்
பசிய சோலையெங்கும் புள்ளினம் பாடும்
மதுர கானம்
பசுங் கிளிகள் பாடிப் பேசும்
வண்ண ஜாலம்
நெல்லும் புல்லும் தொட்டு வரும்
இனிய தென்றல்
மண்ணும் கல்லும் கலந்து வரும்
ஓட்டை வீதி
மாடிசைக்கும் மணியின் ஓசை ஊடே
மாட்டு வண்டி
மனிதம் வாழும் அழகிய தளம்
காடும் வயலும்
நவீனம் அறியா பாமரன்
வாழும் ஊரு
கபடம் அறியா ஜீவன்
வாழும் சொர்க்கம்
பசியாய் ருசித்து எதையும் உண்போர்
வாழும் பூமி
குணமே பணமாய் கொள்வோர்
வாழும் கழனி
இறை புகழ் பாடும் மாந்தர்
உள்ள பூமி
தவறை தவறென்றறியாமல்
செய்யும் ஊரு
வேற்றுமைக்கு விதிவிளக்கானது
இவ்வூரு
ஒற்றுமைக்கு இலக்கணம் அழகிய
இவ்வூரு