எந்தை

எனது சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படமொன்றில்
எனது கண்கள்
எனது இளமீசை
எனது சட்டை
எனது பற்களுடன்
சிரித்து கொண்டிருக்கிறார் அப்பா
மரித்து போய் பத்தாண்டுகள் ஆன பின்பும்.

எழுதியவர் : நாகர் பாபு (29-Jan-14, 8:07 pm)
Tanglish : enthai
பார்வை : 91

மேலே